கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலை ‘கிடுகிடு’ உயர்வு

சென்னை: சென்னை மற்றும் புறநகரில் தற்போது மழை பெய்து வருகிறது. இந்த மழை மேலும் நீடிக்கும் என்பதால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகளின் விலை ‘கிடுகிடுவென’ உயர்ந்து வருகிறது. கோயம்பேடு மார்க்கெட்டில் ஒரு கிலோ வெங்காயம் விலை ரூ40 ஆக இருந்தது. நேற்று அதன் விலை ரூ65 ஆக உயர்ந்தது. ரூ45க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ சாம்பார் வெங்காயம் நேற்று ரூ70-க்கு விற்கப்பட்டது. இதேபோன்று, ஒரு கிலோ நாட்டு தக்காளி ரூ 15-லிரு ந்து ரூ20 வரையும், நவின் தக்காளி ரூ22-ல் இருந்து ரூ25 வரையும் ,கேரட்ரூ 65-லிருந்து ரூ70 வரையும், ₹பீன்ஸ் 30-ல் இருந்து ரூ40 வரையும், பீட்ருட் ரூ 25-ல் இருந்து ரூ30 வரையும்,

சவ்சவ் ரூ10-ல் இருந்து ரூ12 வரையும், முள்ளங்கி ரூ15-ல் இருந்து ரூ20 வரையும், வெண்டைக்காய் ரூ20-ல் இருந்து ரூ 25 வரையும் , கத்திரிக்காய் ரூ 20-ல் இருந்து ரூ25 வரையும், பாகற்காய் ரூ20-ல் இருந்து ரூ25 வரையும், புடலங்காய் ரூ15-ல் இருந்து ரூ20 வரையும். கோவைக்காய் ரூ15-ல் இருந்து ரூ20 வரையும், சுரக்காய் ரூ15-ல் இருந்து ரூ20 வரையும், முருங்கைகாய் ரூ25-ல் இருந்து ரூ30 வரையும், பச்சை மிளகாய் ரூ20-ல் இருந்து ரூ25 வரையும் , இஞ்சி ரூ30-ல்  இருந்து ரூ50 வரையும், அவரைக்காய் ரூ30-ல் இருந்து ரூ35 வரையும் விலை உயர்ந்து விற்கப்பட்டது.

Related Stories:

>