15 ஆண்டுகளுக்கு முன் விதிக்கப்பட்ட ஈரான் மீதான ஐநா.வின் தடை முடிவுக்கு வந்தது: நீட்டிப்பு செய்யாததால் அமெரிக்கா டென்ஷன்

டெக்ரான்: ஈரான் மீது ஐநா சபை 15 ஆண்டுகளுக்கு முன் விதித்த ஆயுதத் தடை நேற்றுடன் முடிந்தது. அணு ஆயுதங்கள் தயாரிப்பு, தீவிரவாதத்தை ஊக்குவித்தல் போன்ற பல்வேறு சர்வதேச நெறிமுறைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டதால், ஈரான் மீது ஐநா பாதுகாப்பு கவுன்சில் பொருளாதார தடை விதித்தது. இதனால், கடும் நெருக்கடிக்கு ஆளான ஈரான், அணுசக்தியை ஆக்கப்பூர்வமாக மட்டுமே பயன்படுத்துவோம் என்று உத்தரவாதம் கொடுத்தது. எனவே, பொருளாதாரத் தடைகளை மட்டும் ஐநா திரும்பப் பெற்றது. ஆனால், ஆயுதத் தடை அக்டோபர் 18ம் தேதி 2020 வரை தொடரும் என்று 5 ஆண்டுகளுக்கு முன்பு அறிவித்தது.

இந்நிலையில், ஈரான் உடனான அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து வெளியேறிய அமெரிக்கா, ஈரான் மீதான பொருளாதார தடையை மீண்டும் காலவரையின்றி தொடர வேண்டும் என்று ஐநா.வை தொடர்ந்து வலியுறுத்தி வந்தது. இதற்காக அமெரிக்கா மேற்கொண்ட பல முயற்சிகள் தோல்வி அடைந்தன. இந்நிலையில். ஈரான் மீது விதிக்கப்பட்ட ஐநா.வின் தடைகள் அனைத்தும் நேற்று முடிவுக்கு வந்தது. புதிய தடை நீட்டிப்பு பற்றி எந்த அறிவிப்பையும் ஐநா இதுவரை அறிவிக்கவில்லை. இதனால். அமெரிக்கா கடும் கோபம் அடைந்துள்ளது.

Related Stories:

>