×

மனநலம் பாதித்த பெண் பலாத்காரம்

தண்டையார்பேட்டை: புது வண்ணாரப்பேட்டை பகுதியில் 26 வயது இளம்பெண் மனநலம் பாதிக்கப்பட்டு, சாலையில் சுற்றித் திரிந்தார். கடந்த 11ம் தேதி இவரை மீட்ட சமூக ஆர்வலர்கள், அங்குள்ள ஒரு காப்பகத்தில் சேர்ப்பதற்காக கொரோனா பரிசோதனை செய்தனர். அதில், அந்த பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு மருத்துவர்கள் பரிசோதனையில் அந்த பெண் 3 மாத கர்ப்பிணியாக இருப்பது தெரிந்தது. இதுகுறித்து புது வண்ணாரப்பேட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் வழக்கு பதிந்து, மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை கர்ப்பமாக்கிய நபர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Rape of a mentally ill woman
× RELATED சேலத்தில் தொடர் பலாத்காரம் மகளிர்...