×

தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு மீண்டும் நீட் பயிற்சி கிடையாது: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

கோபி: முதல் முறை நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு, அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். ஈரோட்டில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: மருத்துவ படிப்பிற்காக 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு என்ற முறையில், அரசு பள்ளி  மாணவர்களுக்காக சட்டம் இயற்றப்பட்டது. அதற்கு ஆளுநர் ஒப்புதல் கிடைத்தால் 300 மாணவர்கள் கூடுதலாக பயன்பெறுவார்கள். பள்ளி திறப்பு தற்போதைக்கு சாத்தியமில்லை.

அது தொடர்பான ஆலோசனை கூட்டம் எதுவும் நடைபெறவில்லை. இ-பாக்ஸ் நிறுவனம் மூலம் ஒரு முறைதான் மாணவர்களுக்கு நீட் பயிற்சி அளிக்கப்படும். முதல் முறையாக நீட் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அரசு சார்பில் மீண்டும் பயிற்சி அளிக்கப்பட மாட்டாது. அவர்கள் தனியாக பயிற்சி பெற்று தேர்வு எழுத  வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Tags : Minister Senkottayan , Students who do not pass will not have NEET training again: Minister Senkottayan
× RELATED பள்ளிகள் திறப்பு குறித்து...