×

கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டகாசம்

ராமேஸ்வரம்: ஒரு வாரத்திற்கு பின் கடலுக்கு சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். பலத்த காற்று, வங்கக்கடலில் புயல் சின்னம் காரணமாக ஒரு வாரத்துக்கு பிறகு ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று முன்தினம் காலை 500க்கும் மேற்பட்ட படகுகளில், கடலுக்கு சென்றனர். நடுக்கடலில் இரவு நேரத்தில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது வாட்டர் ஸ்கூட்டரில் ரோந்து வந்த இலங்கை கடற்படையினர், ராமேஸ்வரம் மீனவர்களை விரட்டியடித்தனர்.

இதனால் அவர்கள் வேறு பகுதிக்கு சென்றனர். அங்கு இரவு முழுவதும் மீன் பிடித்து விட்டு நேற்று காலை கரை திரும்பினர். இதனிடையே மீனவர்களின் படகுகளை இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தது குறித்து ராமேஸ்வரம் மீன்வளத்துறை மற்றும் புலனாய்வு துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.


Tags : fishermen ,Rameswaram ,sea ,Sri Lankan , Rameswaram fishermen chased out to sea: Sri Lankan navy
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்த...