×

‘ஆபீசுக்கு நேரில் வந்தால் சுடுகாடு ஆக்கி விடுவேன்’ பெண் துணை கலெக்டருக்கு போனில் அலுவலர் சங்க நிர்வாகி மிரட்டல்: வாட்ஸ்அப் ஆடியோவால் பரபரப்பு

சேலம்: சேலத்தில், பெண் துணை கலெக்டருக்கு வருவாய்த்துறை அலுவலர் சங்க நிர்வாகி மிரட்டல் விடுக்கும் ஆடியோ, வாட்ஸ் அப்பில் வேகமாக பரவி வருகிறது. சேலம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தின் 3வது தளத்தில், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இங்கு துணை கலெக்டர் சாந்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலராக பணியாற்றி வருகிறார். ெபண் ஊழியர் ஒருவரை வெளிநபர்கள் முன்னிலையில், அவர் திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து அப்பெண் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினரிடம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து, துணை கலெக்டர் சாந்தியை போனில் தொடர்பு கொண்ட, அச்சங்கத்தின் மாவட்ட செயலாளர் அர்த்தநாரி,  “ஆபீசுக்கு நேரில் வந்தால் சுடுகாடு ஆக்கி விடுவேன். நீயும் ஒரு பெண் அதிகாரி தானே, ஆபீசையே இழுத்து மூடி, சீல் வைத்துவிடுவேன். அதிகாரியா இருந்தா என்ன வேண்டுமானாலும் பேசுவியா,” என கூறுகிறார். இந்த ஆடியோ வாட்ஸ்அப்பில் வைரலானதால் இந்த விவகாரம், கலெக்டரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. 


Tags : office ,union administrator ,deputy collector , Fire, ’female deputy collector, officer union administrator, intimidation
× RELATED ‘கள்ள ஓட்டு போட்டவரை கண்டு...