சிறப்பு ரயில்களில் சொந்த மாநிலங்களுக்கு செல்ல 3.54 லட்சம் புலம் பெயர் தொழிலாளர்களுக்காக மக்களின் வரிப்பணத்திலிருந்து ரூ34.60 கோடி செலவு

* ரயில்வேக்கு தமிழகம் செலுத்தியது

* தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தகவல்

சென்னை: தமிழ்நாட்டிலிருந்து 265 ரயில்கள் இயக்கப்பட்டு 3,54,150 பயணிகள் பயணம் செய்துள்ளனர். இந்த பயணிகளுக்கான டிக்கெட்டுக்கான ரூ34 கோடியே 60 லட்சத்து 93 ஆயிரத்து 845ஐ மக்களின் வரிப்பணத்தில் இருந்து தமிழக அரசு ரயில்வே துறைக்கு அளித்துள்ளது என்று தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் சமூக ஆர்வலர் பாண்டியராஜா தகவல் பெற்றுள்ளார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த மார்ச் 24ம் தேதி முதல் பொது போக்குவரத்துக்கள் அனைத்தும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து பல்வேறு மாநிலங்களிலிருந்து புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் சொந்த மாநிலத்துக்கு செல்ல ரயில்வேதுறை ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் என்ற பெயரில் பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்களை பல்வேறு நிபந்தனைகளுடன் மே மாதம் முதல் இயக்கப்பட்டது. தமிழ்நாட்டிலிருந்து 265 ரயில்கள் இயக்கப்பட்டு 3,54,150 பயணிகள் மொத்தம் பயணம் செய்துள்ளனர்.

இந்த பயணிகளுக்கு பயணசீட்டு முழுவதும் தமிழக அரசால் தமிழக மக்களின் வரிப் பணத்திலிருந்து ரூ34,60,93,845 ரயில்வேதுறைக்கு செலுத்தப்பட்டுள்ளது. மேலும், இந்த ரயில்களில் பயணம் செய்ய பயணிகளுக்கு கட்டணத்தை தமிழக அரசு தங்கள் நிதியிலிருந்து ரயில்வே துறைக்கு செலுத்தியது. இந்த நிதியில் எந்த ஒரு கட்டண குறைப்போ? இலவச டிக்கெட்டோ?, முதியோர் பயண கட்டண சலுகையோ? இல்லாமல் முழு கட்டணத்தையும் ரயில்வேதுறை தமிழக அரசிடமிருந்து வசூலித்துள்ளது. இது முழுக்க முழுக்க தமிழக மக்களின் வரிப்பணம் ஆகும். தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட 265 சிறப்பு ரயில்களில் ஒரே ஒரு ரயிலுக்கு தான் தமிழக அரசு பயண கட்டணம் செலுத்தாமல் உத்தரகாண்ட் மாநிலம் பயண கட்டணத்தை செலுத்தியுள்ளது. பிற மாநிலங்களிலிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் பல்வேறு ரயில்களுக்கு பங்கீடு முறையில் பயண கட்டணம் செலுத்தப்பட்டுள்ளது.

ஆனால் தமிழகத்திலிருந்து இயக்கப்பட்ட ரயில்களில் தமிழகம் பெருந்தன்மையுடன் ஒரே ஒரு ரயிலை தவிர மற்ற அனைத்து ரயில்களுக்கும் கட்டணத்தை என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழக அதிகாரிகள் இவ்வாறு செய்யாமல் அனைத்து பயணசீட்டுக்கான நிதியை தமிழக அரசின் நிதியிலிருந்து செலுத்தி உள்ளனர். இது தமிழக அரசின் நிதி சுமையில் மேலும் அதிகரித்துள்ளது. இந்த நிதிசுமை வரியாக தமிழக மக்கள் இனி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும்.இந்த ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் பற்றிய தகவல்களை அறியும் போது மற்றொரு அதிர்ச்சிகரமான தகவல் கிடைக்கப் பெற்றுள்ளது.

தமிழகத்திலிருந்து வடமாநிலங்களுக்கு மொத்தம் சுமார் 7,35,418 வடமாநில தொழிலாளர்கள் ரயில்களில் பயணம் செய்துள்ளனர். இது ரயில்களில் பயணம் செய்தவர்கள பட்டியல் ஆகும். இது இல்லாமல் பேருந்துகளில் பயணம் செய்தவர்கள், இருசக்கர வாகனங்களில் சென்றவர்கள், விமானத்தில் சென்றவர்கள், நடந்து சென்றவர்கள் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கின்றது. தமிழகத்தில் வடமாநில தொழிலாளர்கள் பல்வேறு பணிகளுக்காக இங்கு வருவது அதிகரித்து கொண்டே வருகின்றது.

Related Stories:

>