×

போராடி வெற்றி பெற வேண்டும் நீட்டுக்கு தற்கொலை தீர்வு அல்ல: ராமதாஸ் டிவிட்டரில் கருத்து

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் டிவிட்டர் பதிவு: நீட் தேர்வில் குறைந்த மதிப்பெண் பெற்றதை தாங்கிக் கொள்ள முடியாமல் செஞ்சி மாணவி ரம்யா தற்கொலைக்கு முயன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது. நீட் என்ற சமூக அநீதிக்கு எதிராக போராடி வெற்றி பெறுவதே தீர்வு. தற்கொலை தீர்வு அல்ல.

நீட் தேர்வால் தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளில் 13 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். இன்னும் எத்தனை பேரின் உயிரை நீட் காவு வாங்கப் போகிறதோ? நீட் தேர்வு முடிவுகளுக்காக மாணவர்கள் எவரும் தற்கொலை முயற்சிகளில் ஈடுபடக் கூடாது என கேட்டுக் கொள்கிறேன்.

Tags : Ramadas , Struggling to win is not a suicide solution for the stretch: Ramadas commented on Twitter
× RELATED ஓவர் கான்பிடன்ஸ் வேணாம்..! தொண்டர்களுக்கு ராமதாஸ் கடிதம்