×

சிறப்பு அந்தஸ்து பல்கலைக்கு லாபமே: மன்னர் ஜவஹர், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர்

அண்ணா பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு அந்தஸ்து கொடுப்பதை ஒரேயடியாக நல்லது இல்லை என்று கூறிவிட முடியாது. சிறப்பு அந்தஸ்து கிடைப்பது நமக்கு நல்லது தான். சிறப்பு அந்தஸ்து கிடைக்கும் பட்சத்தில் மாணவர்களின் கல்வி கட்டணம் அதிகமாகும் என்பது இல்லை. அவர்கள் கல்வி கட்டணம் செலுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் என்பதும் கிடையாது. மேலும், மாணவர்களின் கல்வி ஆய்வு என்பது மிகவும் முக்கியம். இதேபோல், பல்கலைக்கழகத்திற்கு நிதி என்பது முக்கியம். பல்கலைக்கழகத்திற்கு தேவையான நிதியை மத்திய, மாநில அரசுகளிடம் இருந்து பெற வேண்டும். இதில் எந்த அளவிற்கு நாம் முயற்சி எடுக்கிறோம் என்பதை பொறுத்தே உள்ளது.

நல்ல மதிப்பெண்கள் எடுப்பவர்கள், ஆராய்ச்சிகளில் சிறந்து விளங்கும் மாணவர்களுக்கு இடம் உடனடியாக கிடைக்கும். நிறைய தொழில் நிறுவனங்களில் அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்த மாணவர்களே அதிகம் இருக்கிறார்கள். நான் துணைவேந்தராக இருக்கும் போது மற்ற கல்லூரிக்கு தரச்சான்று கொடுக்க செல்வேன். அப்போது இங்கே படித்த மாணவர்கள் அங்கு ஆசிரியர்களாக இருப்பார்கள். அதை பார்க்கும் போது மிகவும் பெருமையாக இருக்கும். வெளிநாடுகளிலும் அதிகமானவர்கள் இங்கு படித்தவர்கள் இருக்கிறார்கள். இதேபோல், அண்ணா பல்கலைக்கழகத்தின் பெயரை மாற்றுவது என்பது சரியாக இருக்காது.

இந்த பல்கலைக்கழகத்தில் படித்த பலரும் பல்வேறு துறைகளில் இருப்பதால் இதே பெயர் தான் தொடர வேண்டும். அதுதான் மாணவர்களுக்கும், பல்கலைக்கழகத்திற்கும் சிறப்பாக இருக்கும். சிறப்பு அந்தஸ்து கொடுக்கும்போது அது பல்கலைக்கழகத்திற்கு லாபம் தான். இந்தியாவில் 400க்கும் மேற்பட்ட நல்ல பல்கலைக்கழகங்கள் உள்ளன. இந்த வரிசையில் நமது பல்கலைக்கழகத்தின் பெயரும் உள்ளது. அப்படி சிறப்பு அந்தஸ்து கொடுக்கும் போது அது நல்லதாகவே இருக்கும். தரச்சான்று என்ன என்பதை பார்க்க வேண்டும். அகாடமிக் ரீதியாக மிகவும் திறனாக இருக்க வேண்டும். விளையாட்டு உள்ளிட்டவைகளிலும் சிறப்பாக இருக்க வேண்டும்.

உயர்கல்வி என்பதை பார்க்கும் போது நிறைய உள்ளது. பல்கலைக்கழகங்களில் உள்தரம் நன்றாக இருக்கும் போது அது வெளியேயும் நன்றாகவே இருக்கும். நமது தரத்தை மேம்படுத்த வேண்டும். கல்விக்கான தரத்தையும், பல்கலைக்கழகத்திற்கான தரத்தையும் நாம் உயர்த்தினாலே போதும் அனைவரும் நம்மை தேடி வருவார்கள். சிறப்பு அந்தஸ்தை பொறுத்தவரையில், நான் கிராமப்புறத்தை சேர்ந்தவன் தான். கஷ்டப்பட்ட குடும்பத்தில் இருந்தே படித்தேன். ஆனால், கல்வியை சிறப்பாக கற்றேன். கல்வியை சிறப்பாக கற்கும் போது கிராமப்புற மாணவர்கள், நகர்ப்புற மாணவர்கள் என்று கிடையாது. யாராக இருந்தாலும் உள்ளே வரலாம்.

பள்ளிகளிலேயே மாணவர்களை ஆசிரியர்கள் ஊக்குவிக்க வேண்டும். அப்படி ஊக்குவிக்கும் போது அதிக மதிப்பெண்களை எடுக்கும் போது. பல்கலைக்கழகங்களின் அந்தஸ்தை உயர்த்தினாலும் சரி, உயர்த்தாவிட்டாலும் சரி அவர்களுக்கான இடங்களில் வர முடியும். சிறப்பான ஒரு இடத்தை மாணவர்களால் அடைய முடியும். பல்கலைக்கழகங்களில் உள்தரம் நன்றாக இருக்கும் போது அது  வெளியேயும் நன்றாகவே இருக்கும். நமது தரத்தை மேம்படுத்த வேண்டும். கல்விக்கான தரத்தையும், பல்கலைக்கழகத்திற்கான தரத்தையும் நாம் உயர்த்தினாலே போதும் அனைவரும் நம்மை தேடி வருவார்கள்.

Tags : Anna University ,vice chancellor , Profit for special status university: King Jawahar, former vice chancellor of Anna University
× RELATED பதிவாளர் நியமனம் தொடர்பாக அண்ணா...