×

இடிந்து விழும் அபாயத்தில் பெரம்பலூர் பழைய பஸ் ஸ்டாண்ட் 50 ஆண்டு பழமையான கட்டிடத்திற்கு விடிவு காலம் பிறப்பது எப்போது?: வியாபாரிகள், பொதுமக்கள் எதிர்பார்ப்பு

தமிழகத்தின் மையத்திலிருக்கும் மிகச்சிறிய மாவட் டம் பெரம்பலூர் ஆகும். 1995ம்ஆண்டு நவம்பர் 1ம் தேதி ஒருங்கிணைந்த திருச்சி மாவட்டத்திலிருந்து பெரம்பலூர் மாவட்டம் உதயமான போது, தற்போதுள்ள மாவட்ட தலைநகர் ஒரு பேரூராட்சியாக மட்டுமே இருந்தது. இந்த பெரம்பலூர் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்பு சாதாரண ஊராட்சியாக இருந்தபோது, அப்போதைய ஊராட்சி மன்ற தலைவரான அழகேசநாயுடு என்பவரது முயற்சியால் கட்டப்பட்ட, தற்போதுள்ள பழைய பஸ்டாண்டு, முன்னாள் முதல்வர் காமராஜரால் திறந்து வைக்கப்பட்டது. அதனாலேயே காமராஜர் பஸ் ஸ்டாண்டு என பெயர் பெற்றது. ஐந்தாறு பஸ்களே நிறுத்தக் கூடிய பகுதியில், 20 ஆண்டுகளுக்கு முன்பே 10 மாவட்ட பஸ்கள் வந்து செல்லும் பரபரப்புடன் காணப்பட்டது தான் பழைய பஸ் ஸ்டாண்டு. 1995க்கு பிறகு பெரம்பலூர் மாவட்டம் உதயமான பிறகு போக்குவரத்து வசதிகளுக்காக தேசிய நெடுஞ்சாலையில் செல்லும் அரசு விரைவு போக்குவரத்துக்கழக பஸ்கள் மாவட்ட தலை நகருக்குள் வந்து செல்லும் வகையில் அண்ணா புதிய பஸ்டாண்டு அமைக்கப்பட்டது.

தற்போது பெரம்பலூர் தரம் உயர்த்தப்பட்டு 2ம் நிலை நகராட்சியாக இருந்தாலும் கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக நகரின் வர்த்தக கேந்திரமாக தன்னை வடிவமைத்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் வந்து செல்லும் பரபரப்புடன் இருப்பது பழைய பஸ் ஸ்டாண்டு தான். கடைவீதி, காய்கறி மார்க்கெட், ஹெட்போஸ்ட் ஆபீஸ் அருகருகே உள்ளதால் பல கிராம மக்களுக்கு பழைய பஸ் ஸ் டாண்டை தவிர வேறேந்த பகுதிகளும் புழக்கத்தில் இல்லாமல் கூட இருந்தது. புதுசுக்கு வந்த மவுசுக்கு பிறகு, பழசெல்லாம் ஓரங்கட்டப்படும் என்பது போல்,புது பஸ் ஸ்டாண்டு கட்டப்பட்ட பிறகு பழைய பஸ்டா ண்டும் ஏனோ ஏரெடுத்துப்பார்க்க ஆளில்லாததால் பராமரிப்பின்றி ஏனோதானோவென்று தான் கிடக்கிறது. அடிக்கடி கட்டிடத்தின் தென்புற கான்கிரீட் கொட்டிக்கொட்டி குவிந்தபோது, பல மாதங்கள் அதனை அள்ளக்கூட முற்படாத அவல நிலைதான் ஏற்பட்டது.

பலநூறு பயணிகள் வந்து செல்லும் தரைத்தளம் சிதிலமடைந்து பல வாரங்கள் பாழாய்க் கிடந்தது. வயதான பயணிகள் வந்து அமரக்கூட வழியின்றி சளித்து கொண்டு செல்லும் சங்கடமான நிலையில் கிடந்தது. இரும்பு நாற்காலிகளையு ம் விட்டுவைக்காத சமூக விரோதிகள் பலர் உடைத்து நாசப்படுத்திவிட்டனர். சமீபத்தில் தான் நகராட்சி ஆணையர் குமரி மன்னன் நடவடிக்கையால், தரைத்தளமும், தென்புறகட்டிடமும் சீரமைக்கப்பட்டது. இதனை அடிக்கடி பழுதுபார்த்து பழுது பார்த்துக் காலத்தை வீ ணாக்காமல் புதிதாகத்திட்டமிட்டு புணரமைத்து புதுப்பொழிவு ஏற்படுத்த வேண் டும் என்பதே சமூக ஆர்வலர்கள் முதல், சாமினிய மக்கள் வரை விடுக்கும் வேண்டுகோளாக உள்ளது. பழைய பஸ் ஸ்டாண்டு பாரின் ரேஞ்சுக்குத் தரம் உயர்த்தப்படா விட்டாலும், பயணிகள் பயமின்றி வந்தமர்ந்து செல்லவாவது பராமரித்து பழுது பார்க்கப்பட வேண்டும் என்பதே பிரதான கோரிக்கையாகவும் உள்ளது.

இதுகுறித்து பெரம்பலூர் நகராட்சிஆணையர் குமரி மன்னனிடம் கேட்டபோது தெரிவித்ததாவது: கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பே பழைய பஸ்டாண் டு கட்டிடத்தை புதுப்பிக்கத்திட்டமிடப்பட்டு அத ற்கு போதி ய நிதி இல்லாத காரணத்தால் தள்ளி வைக்கப்பட்டதாக தெரிய வருகிறது. கடந்த மாதம் கட்டிடத்தின் தரைத்தளம் சிதிலமடைந்து மண்மேடாகக் காட்சியளித்தது. பயணிகள் அமரும் நாற்காலிகள் உடைந்து கிடந்தன. வளாகத்தின் தென்புறம் கான்கிரீட் திண்டு சிதிலமடைந்து கம்பிகள் தெரியும்படி கொட்டிக்கிடந்தது. இதனைத் தொடர்ந்து தரைத்தளம் சீரமைத்து, தென்புறம் பூச்சுபூசி சீரமைக்க ப்பட்டுள்ளது. பயணிகள் அமரக்கூடிய இரும்பு நாற் காலிகள் ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது. விரைவில் பொறுத்தப்பட்டுவிடும்.
மற்றபடி முற்றிலும் இடித்துவி ட்டு புதிதாகக் கட்டுவதற்குப் போதிய நிதியில்லை. கொரோனா தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவே கூடுதல் நிதி தேவைப்படுகிறது. இனி 2021ல் தான் புணரமைப்பு பணிகள் குறி த்து யோசிக்கவே முடியும் எனத் தெரிவித்தார்.

Tags : Perambalur ,bus stand ,building , Perambalur old bus stand in danger of collapsing When will the 50-year-old building be born?
× RELATED தேனி பழைய பஸ்நிலையத்தில் தற்காலிக நிழற்குடையை மாற்றியமைக்க கோரிக்கை