குமரி மலை கிராமங்களுக்கு படகு பயணம்

பேச்சிப்பாறை அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை காயல் என அழைக்கிறார்கள். அதன் மறுகரை மலைப்பகுதியில் மாறாமலை, தோட்டமலை, களப்பாறை மலை, எட்டாங்குன்று, விலாமலை, முடவன் பொற்றை, தச்சமலை, வில்லுசாரி மலை ஆகிய 8 மலை கிராமங்கள் உள்ளன. இந்த மலை கிராமங்களில் ஒட்டு மொத்தமாக 400-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. பெரும்பாலான வீடுகள் ஓலையாலும், தகரத்தாலும் அமைக்கப்பட்டு உள்ளன. மலைப்பகுதியில் உள்ள அந்த கிராமங்களுக்கு செல்ல தார்சாலை இல்லாததால் வாகனங்களில் செல்ல முடிவதில்லை. பள்ளிக்கூடம் செல்லும் மாணவ-மாணவிகளும், பொருட்கள் வாங்க கிராம மக்களும் படகு மூலம் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியை கடந்து வர வேண்டிய நிலை நிலவுகிறது.

Related Stories:

>