இந்தியாவில் கொரோனா பாதிப்பு: 75 லட்சமாக உயர்வு

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதித்தவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 75 லட்சத்தை நெருங்கியது. மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாடு முழுவதும் கொரோனா தொற்றால் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 62,212 பேர் பாதித்துள்ளனர்.இதன் மூலம், மொத்த பாதிப்பு 74,32,681 ஆக அதிகரித்துள்ளது. நோய் பாதித்த 837 பேர் புதிதாக இறந்ததை அடுத்து, மொத்த பலி 1,12,998 ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை, 7,95,087 ஆக குறைந்துள்ளது. ஒன்றரை மாதங்களுக்கு பின் முதல் முறையாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 8 லட்சத்துக்கும் கீழ் குறைந்துள்ளது. 65,24,596 பேர் குணமடைந்துள்ளனர்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிக்கையின்படி, கடந்த வெள்ளியன்று வரை  9,32,54,017 பேரின் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளது. 16ம் தேதி மட்டும் 9,99,090 பேரின் மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டது. இந்நிலையில், நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 75 லட்சத்தை நெருங்கியது.

Related Stories:

>