×

ஐப்பசி மாத பூஜை சபரிமலையில் தினமும் 250 பக்தர்கள் அனுமதி: நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை

திருவனந்தபுரம்: கொரோனா ஊரடங்கால் 7 மாதங்களுக்குப் பிறகு திறக்கப்பட்ட சபரிமலை ஐயப்பன் கோயிலில், முதல் நாளான நேற்று 250 பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு நிலக்கல்லில் கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டது.
கொரோனா  பரவலை தொடர்ந்து கடந்த மார்ச் மாதம் முதல் சபரிமலையில் பக்தர்கள்  அனுமதிக்கப்படவில்லை. இந்நிலையில், ஐப்பசி மாத பூஜைகளுக்காக நேற்று முன்தினம் மாலை 5  மணிக்கு தந்திரி கண்டரர் ராஜீவரர் முன்னிலையில், மேல்சாந்தி சுதீர்  நம்பூதிரி நடை திறந்தார். முதல் நாளான நேற்று 250 பக்தர்கள் சபரிமலைக்கு அனுமதிக்கப்பட்டனர். 7 மாதங்களுக்கு பின்னர் நேற்று சபரிமலையில் பக்தர்கள் மீண்டும் தரிசனம் செய்தனர். முதல் நாளான நேற்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி ஆன்லைனில் முன்பதிவு செய்த 250 பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். வரும் 21ம் தேதி வரை இதேபோல்  தினமும் 250  பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள்.

சபரிமலைக்கு வரும்  பக்தர்களுக்கு நிலக்கல்லில், கொரோனா தொற்று உள்ளதா என்பதை கண்டறிவதற்கான ஆன்டிஜன் பரிசோதனை நடத்தப்பட்டது. இதற்கான செலவை  பக்தர்களே ஏற்க வேண்டும் என அரசு தரப்பில் ெதரிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால், சென்ைனயை ேசர்ந்த ஒரு  நிறுவனம் பக்தர்களுக்கு இலவசமாக பரிசோதனைகளை நடத்த முன்வந்தது. இதையடுத்து, பக்தர்களுக்கு இலவசமாக  ஆன்டிஜன் பரிசோதனை  நடத்தப்பட்டது.

சபரிமலை, மாளிகைபுரம் புதிய மேல்சாந்தி தேர்வு
சபரிமலையில் நேற்று காலை உஷபூஜைக்கு பின்னர் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களுக்கான  புதிய மேல்சாந்திகள் குலுக்கல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஏற்கனவே,  நேர்முக தேர்வு மூலம் சந்நிதானத்துக்கு 9 பேரும், மாளிகைபுரத்துக்கு 10  பேரும் தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தனர். இவர்களில் தலா ஒருவர் புதிய  மேல்சாந்தியாக தேர்வு செய்யப்பட்டனர். பந்தளம் அரண்மனையை சேர்ந்த குழந்தைகள்  குலுக்கல் மூலம்  சீட்டுகளை எடுத்தனர். இதில்,  சபரிமலை மேல்சாந்தியாக ஜெயராஜ் போற்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இவர்,  திருச்சூர் பொய்யா பூப்பத்தி வாரிக்கட்டு மடம் குடும்பத்தை சேர்ந்தவர்.  இதுபோல், மாளிகைபுரத்துக்கு புதிய ேமல்சாந்தியாக அங்கமாலியை ேசர்ந்த  ரெஜிகுமார் தேர்ந்தெடுக்கப்பட்டார்.இவர்கள் மண்டல கால பூஜைகள்  தொடங்கும் கார்த்திகை 1ம் தேதி புதிய மேல்சாந்திகளாக பொறுப்பேற்பர். அடுத்த  ஓராண்டுக்கு இவர்கள் தலைமையில் சபரிமலை மற்றும் மாளிகைபுரம் கோயில்களில் பூஜைகள் நடைபெறும்.

Tags : devotees ,Sabarimala ,Corona , 250 devotees allowed daily in Sabarimala for Ipasi month puja: Corona test on the ground
× RELATED சித்திரை திருநாளை முன்னிட்டு...