நடிகை பலாத்கார வழக்கு விசாரணை நிறுத்திவைப்பு: கேரரளாவில் திடீர் பரபரப்பு

திருவனந்தபுரம்: கேரள மாநிலம், கொச்சியில்  பிரபல நடிகை காரில் கடத்தி பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில், அவரது  முன்னாள் கார் டிரைவர் பல்சர் சுனில் உள்பட 7 ேபர் கைது செய்யப்பட்டனர்.  பிரபல நடிகர் திலீப், இதற்கான சதித் திட்டம் தீட்டியதாக அவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். 85  நாட்கள் சிறைவாசத்துக்கு பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இந்த  வழக்கு விசாரணை எர்ணாகுளம் தனி நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு  முன்பு விசாரணை  நீதிமன்றத்துக்கு ஒரு மொட்டை கடிதம் வந்துள்ளது. அதில்  அரசு தரப்பு  வக்கீலான சுரேஷ் என்பவருக்கு எதிராக சில குற்றச்சாட்டுகள்   தெரிவிக்கப்பட்டு இருந்தன. அந்த கடிதத்தை நீதிபதி ஹனிரோஸ் நீதிமன்றத்தில்   வாசித்துள்ளார். ஆனால், அப்ேபாது வக்கீல் சுரேஷ் நீதிமன்றத்தில் இல்லை.

இந்நிலையில், வக்கீல் சுரேஷ் விசாரணை நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல்   செய்தார். அதில், ‘மொட்டை கடிதத்தில் இருந்த தகவல் குறித்து நான் இல்லாதபோது   வாசித்தது தவறாகும். இந்த வழக்கு விசாரணையில் பாதிக்கப்பட்டவருக்கு நீதி   கிடைக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது. எனவே, விசாரணையை நிறுத்தி வைக்க   வேண்டும். மேலும், வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்துக்கு மாற்ற அனுமதி   அளிக்க வேண்டும். ஏற்கனவே, இந்த வழக்கில் ஒரு சாட்சியை மிரட்டிய  வழக்கில்  நடிகர் திலீபின் ஜாமீனை ரத்து செய்ய கோரிம மனு  பரிசீலிக்கப்படாமலேயே இருக்கிறது,’ என கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து,  இந்த வழக்கு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இது, பரபரப்ைப ஏற்படுத்தி  உள்ளது.

Related Stories: