ஈரோடு எஸ்.பி. தகவல் பெண் எஸ்ஐக்களிடம் அதிகாரி ஆபாசமாக பேசியது நிரூபணம்

ஈரோடு:  ஈரோடு மாவட்ட தொழில்நுட்ப பிரிவில் பணியாற்றும் உயர் அதிகாரி, அவருக்கு கீழ் பணியாற்றும் பெண் எஸ்.ஐ.,க்களிடம் பாலியல் ரீதியாக பேசியும், சில்மிஷத்தில் ஈடுபட்டும் வந்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐக்கள் ஈரோடு எஸ்.பி. தங்கதுரையிடம் கடந்த வாரம் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில், ஏடிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் தனிக்கமிட்டி அமைக்கப்பட்டு, கடந்த 5 நாட்களுக்கு மேலாக விசாரணை நடத்தப்பட்டது.  பாதிக்கப்பட்ட பெண் எஸ்ஐக்கள், புகார் கூறிய உயர் அதிகாரி, தொழில்நுட்ப பிரிவில் உள்ள அனைத்து நிலை போலீசார், இடம் மாற்றமான பெண் போலீசார் ஆகியோரிடம்  விசாரணை நடத்தப்பட்டது. இது குறித்து ஈரோடு எஸ்பி தங்கதுரை கூறியதாவது: விசாரணை அறிக்கை நேற்று தான் பெறப்பட்டது. அதில், ஆபாச பேச்சுக்களை பேசியது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க பரிந்துரைப்பார்கள். அதன்படி, மாவட்ட எஸ்.பி என்ற முறையில் நான் நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>