சிட்கோ அமையும் இடத்தை பார்க்கச் சென்ற காங்கிரஸ் எம்பி ஜோதிமணியை தடுத்து அதிமுகவினர் தகராறு, தள்ளுமுள்ளு

வேடசந்தூர்:  சிட்கோ அமையும் இடத்தை பார்வையிட சென்ற கரூர் எம்பி ஜோதிமணியை, அதிமுகவினர் தடுத்து நிறுத்தி தரைக்குறைவாக பேசியதால் வேடசந்தூர் அருகே பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் அருகே ஆர்.கோம்பை பகுதியில் சிட்கோ அமையவிருக்கும் இடத்தை பார்வையிட கரூர் எம்பி ஜோதிமணி நேற்று சென்றார். அவருடன் திமுக ஒன்றிய செயலாளர் சீனிவாசன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.  அப்போது அதிமுக ஒன்றிய செயலாளர் மலர்வண்ணன், வடுகம்பாடி கூட்டுறவு சங்க தலைவர் சிவக்குமார் உட்பட அதிமுகவினர், எம்பி ஜோதிமணியை உள்ளே விடாமல் தடுத்து நிறுத்தினர். அத்துடன் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டினர். இதனால் அப்பகுதியில் இரு தரப்பினரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதை தடுக்காமல் போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதனால் எம்பி ஜோதிமணி மற்றும் திமுகவினர் அங்கிருந்து வெளியே சென்றனர். சிறிது நேரம் கழித்து சிட்கோ அமையும் இடத்தை பார்வையிட்டு சென்றனர். இதுகுறித்து எம்,பி ஜோதிமணி கூறுகையில், ‘‘சிட்கோ திட்டத்தை பார்வையிட வந்த எங்களை தடுத்து திட்டுகின்றனர். இதற்கு விரைவில் பொதுமக்கள் நல்ல தீர்ப்பு தருவார்கள்’’ என்றார்.

Related Stories:

>