×

பிரமோற்சவத்தின் 2ம் நாள் அன்ன வாகனத்தில் வந்து அருள்பாலித்த மலையப்பர்: இன்று காலை சிம்ம வாகனம்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் நவராத்திரி பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று இரவு அன்ன வாகனத்தில் மலையப்ப சுவாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பிரமோற்சவத்தின் 3ம் நாளான இன்று காலை மலையப்ப சுவாமி சிம்ம வாகனத்தில் காட்சியளிக்க உள்ளார். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவராத்திரி பிரமோற்சவம் நேற்று முன்தினம் இரவு தொடங்கியது. பிரமோற்சவத்தின் முதல் வாகன சேவையாக பெரிய சேஷ வாகனத்தில் மலையப்ப சுவாமி கோயிலில் உள்ள கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பிரமோற்சவத்தின் 2ம் நாளான நேற்று காலை மலையப்ப சுவாமி சின்ன சேஷ வாகனத்தில் கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நேற்று இரவு உற்சவத்தில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத மலையப்ப சுவாமி அன்ன வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதற்கு முன்னதாக சுவாமிக்கு கற்பூர தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், அர்ச்சகர்கள் மற்றும் ஜீயர்கள் வேத மந்திரங்கள் முழங்கினர். பிமோற்சவத்தின் 3 நாளான இன்று காலை சிம்ம வாகனத்திலும், இரவு முத்து பந்தல் வாகனத்திலும் மலையப்ப சுவாமி பக்தர்களுக்கு அருள்பாலிக்க உள்ளனர். கொரோனா வைரஸ் தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக வருடாந்திர பிரமோற்சவத்தைபோன்று நவராத்திரி பிரமோற்சவத்திலும் சுவாமி உலா ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

* 15,397 பக்தர்கள் தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நேற்று முன்தினம் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை மொத்தம் 15,397 பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 5,136 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். பக்தர்கள் உண்டியல் காணிக்கையாக ரூ.1.63 கோடி செலுத்தினர்.

Tags : mountaineer ,Anna , On the 2nd day of Pramorsavam, Anna came in the vehicle and blessed the mountaineer: this morning the lion vehicle
× RELATED 2024 டான்செட் தேர்வு முடிவுகளை வெளியிட்டுள்ளது அண்ணா பல்கலைக்கழகம்..!!