×

அதிமுக கொடியை தலைகீழாக ஏற்றிய துணை சபாநாயகர்

காங்கேயம்: திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஒன்றியம், ஆலாம்பாடி ஊராட்சிக்கு உள்பட்ட நெய்க்காரன்பாளையத்தில் அதிமுக 49ம் ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி நேற்று நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ நடராஜ் தலைமை வகித்தார். சட்டப்பேரவை துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்து கொண்டு கட்சி கொடி ஏற்றினார். கம்பத்தில் முழுவதும் ஏற்றியவுடன், கொடி தலைகீழாக ஏற்றப்பட்டது குறித்து, கட்சி தொண்டர்கள் கூச்சலிட்டனர். அதன்பின், கொடியை கீழே இறக்கி மீண்டும் சரியாக ஏற்றினார். கட்சி துவக்க நாளில் இச்சம்பவம் அபசகுணமாக உள்ளது. வரும் தேர்தலில் என்ன நடக்குமோ? என நிர்வாகிகள் புலம்பி சென்றனர். இச்சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags : Deputy Speaker ,AIADMK , Deputy Speaker hoisted the AIADMK flag upside down
× RELATED முதல்வர் வருகைக்காக அதிமுக...