×

பூமிக்கு அருகில் வந்த செவ்வாய் கோள்

* டெலஸ்கோப், வெறும் கண்ணால் பார்க்கலாம்
* மீண்டும் 2035ல் தான் பார்க்க முடியும்

திருச்சி: பூமிக்கு அருகில் செவ்வாய் கோள் வந்தது. இந்த அரிய நிகழ்சை வெறும் கண்ணால் பார்க்கலாம் என்று திருச்சி கோளரங்கம் தெரிவித்துள்ளது. செவ்வாய் சிவப்பு நிற கிரகம். செவ்வாயில் உயிர் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் பற்றிய ஆராய்ச்சியை மங்கள்யான் மேற்கொண்டது. செவ்வாய் கிரகம் பூமியை நீள் வட்ட பாதையில் சுற்றி வருகிறது. இதில் ஒருபக்கம் நீளம் அதிகமாக இருக்கும், மற்றொரு பக்கம் நீளம் குறைவாகவும் இருக்கும். செவ்வாய் கிரகம் பூமியை 5.30 கோடி கி.மீ., குறைவாகவும், 40 கோடி கி.மீ. அதிக தூரத்தில் சுற்றி வருகிறது. இந்த வகையில் தற்போது பூமிக்கு 6.2கோடி தொலைவில் மிக அருகில் தற்போது சுற்றி வருகிறது.

இந்த நிகழ்வு மீண்டும் 2035ம் ஆண்டில் தான் நடக்கும். இந்த நிகழ்வை விஞ்ஞானிகள் அதிகளவில் பயன்படுத்தி ஆராய்ச்சி செய்து வருகின்றனர். இந்த நிகழ்வை டெலஸ்கோப் மூலம் பார்க்கும்போது ஒலிம்பஸ் மானிஸ் எரிமலையையும், வேலஸ்மரீனரிஸ் நீள பள்ளத்தாக்கை பார்க்கலாம். பனிமூடிய  பகுதிகளையும் தெளிவாக பார்க்கலாம். ெடலஸ்கோப் அல்லது அதிநவீன ேகமராக்கள் மூலம் பார்க்க முடியும். வெறுங்கண்ணாலும் பார்த்து ரசிக்கலாம். இந்த நிகழ்வை மாலை 6 மணிக்குமேல் கிழக்கு வானம் பகுதியில் பார்க்கலாம். மற்ற நாட்களில் செவ்வாய் கிரகம் வெளிர் சிவப்பாக தெரியும்.

தற்போது அடர் சிவப்பு நிறமாக தெரியும். கொரோனா காரணமாக திருச்சி கோளரங்கத்தில் டெலஸ்கோப்பில் பார்க்க முடியாது  என கோளரங்க முதுநிலை அறிவியல் உதவியாளர் ஜெயபால் தெரிவித்தார்.

Tags : Mars ,Earth , Mars is the closest planet to Earth
× RELATED திருமணத்துக்குத் தடையாகும் செவ்வாய் தோஷம்