×

தமிழகத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது: தஞ்சையில் அமைச்சர் காமராஜ் பேட்டி..!!

சென்னை: தமிழகத்தில் சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். தஞ்சை அருகே குருவாடிப்பட்டியில் உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில் அமைச்சர் காமராஜ் திடீர் ஆய்வு மேற்கொண்டார். நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேடு நடப்பதாக தொடர்ந்து புகார்கள் வெளியான நிலையில் இந்த ஆய்வினை அவர் மேற்கொண்டார்.

இதனையடுத்து, செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது: நேரடி கொள்முதல் தற்போது சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. 1,000 நெல் மூட்டைக்கும் மேல் வரும் பகுதிகளில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது ஒரே ஊரில் இரண்டு கொள்முதல் நிலையங்கள் திறக்கவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 826 நேரடி கொள்முதல் நிலையங்களில் 2 லட்சத்து 10 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் தற்போது சாதனை அளவில் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.

நெல் கொள்முதல் நிலையங்களில் முறைகேட்டில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். கொள்முதல் நிலையங்களில் தினமும் ஆயிரம் மூட்டைகள் நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. ஆயிரம் மூட்டைக்கும் மேல் நெல் வரும் பகுதியில் கூடுதல் நெல் கொள்முதல் நிலையம் திறக்க உத்தரவிடப்பட்டுள்ளது, மேலும் செப்டம்பர் 30ம் தேதி வரையிலான கொள்முதல் பருவத்தில் 32.41 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.



Tags : Kamaraj ,interview ,Tamil Nadu ,Thanjavur , Tamil Nadu, Paddy Procurement, Minister Kamaraj, Interview
× RELATED திருச்செந்தூர் நகராட்சியில்...