×

2020 அனைவருக்கும் கடினமான ஆண்டு!

ப்ராக்: செக் குடியரசின் பிரபல டென்னிஸ் வீராங்கனை பெட்ரா கிவிடோவோ. 30 வயதான இவர் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றுள்ளார். 2011, 2014ல் விம்பிள்டன் சாம்பியன் ஆவார். தற்போது சர்வதேச தரவரிசையில் 8வது இடத்தில் உள்ளார். அண்மையில் பிரெஞ்ச் ஓபனில் அரையிறுதியில் தோல்வி அடைந்தார். இந்நிலையில்அவர் தனது டுவிட்டர் பதிவில், ``2020ம் சீசன் நன்றாக முடிந்தது. இதற்காக அனைவருக்கு நன்றி. இது அனைவருக்கும் கடினமான ஆண்டாகும்.

2021 சிறப்பாக இருக்கும் என்று மட்டுமே நம்பமுடியும். 2020 கடினமாக இருந்தபோதிலும், அதிலிருந்து நான் பல புதிய விஷயங்களைக் கற்றுக்கொண்டேன், அது எங்கள் முன்னோக்கை மாற்ற உதவியது’’ என தெரிவித்துள்ளார்.

Tags : 2020 is a difficult year for everyone!
× RELATED 23-11-2020 இன்றைய சிறப்பு படங்கள்