×

சாத்தான்குளம் கொலை வழக்கு: காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு..!!

மதுரை: சாத்தான்குளம் காவலர் தாமஸ் பிரான்சிஸுக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டு காவலர்களால் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது.

சாத்தான்குளத்தில் ஜெயராஜ், அவர் மகன் பென்னிக்ஸ் ஆகியோர் கொலை செய்யப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள், சிறப்பு சார்பு ஆய்வாளர்கள், காவலர்கள் என 10 பேர் கைது செய்யப்பட்டனர். இதில் காவலர் பால்ராஜ் உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்த நிலையில் ஸ்ரீதர் உட்பட 9 பேர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.. இந்த நிலையில், காவலர்கள்  ஜாமீன் மனுக்கள் உயர் நீதிமன்ற கிளையில் தொடர்ந்து தள்ளுபடி செய்யப்பட்டு வந்தது.

இதனையடுத்து, தந்தை- மகன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார் காவலர் தாமஸ் பிரான்சிஸ், அவரது தந்தை உயிரிழந்த காரணத்தினால் அவரது தந்தையின் சடங்குக்காக 3 நாட்கள் இடைக்கால ஜாமீன் வழங்கி இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடைக்கால ஜாமீனில் போது காவல்துறை உரிய பாதுகாப்பை உறுதி செய்திடவும் ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

Tags : Sathankulam ,Thomas Francis ,branch ,Madurai ,High Court , Sathankulam, murder case, Madurai branch of the High Court
× RELATED இன்ஸ்டா படுத்தும்பாடு… குளத்தில்...