×

உணவிற்காக வனத்தை விட்டு வெளியேறும் யானைகள்

பந்தலூர்: பந்தலூர் பகுதியில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகளால் வன எல்லையோர கிராமவாசிகள் பீதிக்குள்ளாகி வருகின்றனர். பந்தலூர் சுற்று வட்டார பகுதிகளான அத்திக்குன்னு,அத்திமாநகர்,அய்யன் கொல்லிதட்டாம்பாரை,சேரம்பாடி,சப்பந்தோடு,பிதர்காடு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உணவு தேடி வனப்பகுதியில் இருந்து வனப்பகுதியை யொட்டியுள்ள குடியிருப்புகள் மற்றும் தேயிலை தோட்டங்களுக்கு வரும் காட்டு யானைகளால் தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.

வனத்துறையினர் காட்டு யானைகளை இரவும், பகலும் கண்காணித்து வருகின்றனர். மேலும் யானை- மனித மோதலை தவிர்க்கும் நடவடிக்கையில் வனத்துறை சார்பில் வனப்பணியாளர்கள்,வேட்டைத்தடுப்பு காவலர்கள்  மற்றும் யானை கண்காணிப்பு குழுவினர்கள் அடங்கிய குழு அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்
யானை நடமாட்டம் குறித்து வாட்ஸ்அப் குழுக்கள் அமைத்து பொதுமக்கள் மத்தியில் யானை நடமாட்டம் குறித்து பதிவுகளை வாட்ஸ்அப் குழுக்களில் பதிவு செய்து, அன்றாடம்  விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர் பொதுமக்களும் வனத்துறையின் நடவடிக்கைக்கு ஒத்துழைப்பு கொடுத்து வருகின்றனர். வனத்துறை நடவடிக்கையால் யானை மனித மோதல் சம்பவங்கள் ஓரளவிற்கு  தவிர்க்கப்பட்டு வருகின்றது.

Tags : forest , For food, leave the forest, out, elephants
× RELATED யானைகள் ஊருக்குள் வருவதை தடுக்க...