×

பஸ் ஸ்டாண்டில் மின்கம்பங்கள் அகற்றம்

ஈரோடு: ஈரோடு மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ஸ்மார்ட்சிட்டி திட்டத்தின்கீழ் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்ஒருபகுதியாக, ஈரோடு மாநகராட்சி பஸ் ஸ்டாண்டில் மின்கம்பங்கள் அகற்றப்பட்டு பாதாள மின்கேபிள்கள் மூலம் மின்சாரம் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதற்காக, பஸ் ஸ்டாண்ட் வளாகத்தில் உள்ள மின்கம்பங்கள் அகற்றும் பணி நேற்று துவங்கியது. மின்கம்பங்கள் அகற்றப்பட்ட பின் பாதாள மின்கேபிள்கள் பதிக்கப்பட்டு பஸ் ஸ்டாண்ட் வளாகம் முழுவதும் மின்விளக்குகள் புதிதாக பொருத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Tags : Removal ,bus stand , Bus, stand, poles, removal, Erode
× RELATED பேரையூரில் பாதாள சாக்கடை அடைப்புகள் அகற்றம்