×

தேர்தல் களத்தில் அயராது உழைப்போம்: அதிமுக தொண்டர்களுக்கு இபிஎஸ், ஓபிஎஸ் கடிதம்

சென்னை: தேர்தல் களத்தில் வெற்றி காண அயராது உழைப்போம் என்று அதிமுக தொண்டர்களுக்கு எடப்பாடி, ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் கூட்டாக கடிதம் எழுதியுள்ளனர்.இதுகுறித்து அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அதிமுக தொண்டர்களுக்கு நேற்று எழுதியுள்ள கடிதம்:  அதிமுக தொண்டர்களுக்கு 49வது ஆண்டு தொடக்க விழா நல்வாழ்த்துகள். அடுத்த ஆண்டு 2021, நம் அனைவருக்கும் மிக முக்கியமான ஆண்டாக அமையப் போகிறது.

தேர்தல் களத்தில் வெற்றி காண அயராது உழைப்போம். அதிமுக பொன்விழா கொண்டாட்டத்தின்போது, அதிமுக ஆட்சி கட்டிலில் அமர்ந்திருக்கும் மகத்தான வரலாற்று சாதனையை படைப்போம். பணிகளை இன்றே தொடங்குவோம் என்று அன்போடு அழைக்கிறோம்.  அதிமுகவை எம்ஜிஆர் தொடங்கிய நாளில் இருந்து இன்றுவரை அதிமுகவை கட்டிக்காத்த தியாகிகளை நன்றியுடன் நினைவு கூர்கிறோம். பொன்விழா ஆண்டு நோக்கி புது பயணம் தொடங்குவோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

Tags : volunteers ,AIADMK ,OPS , Let's work tirelessly in the election field: EPS, OPS letter to AIADMK volunteers
× RELATED சென்னையில் மத்திய அமைச்சர் அமித்ஷா...