இரண்டாவது அரை ஆண்டுக்கான சொத்து வரி செலுத்தினார் ரஜினி

சென்னை: சென்னை    கோடம்பாக்கத்தில் நடிகர் ரஜினிகாந்திற்கு சொந்தமான ராகவேந்திரா திருமண மண்டபம்  உள்ளது. இந்த மண்டபத்திற்கு 6.50 லட்சம் சொத்து  வரி பாக்கி உள்ளது    என்றும், அதை கட்டுமாறும் சென்னை மாநகராட்சி   ரஜினிகாந்துக்கு  அறிவுறுத்தியது. இதையடுத்து, திருமண மண்டபத்துக்கு  விதிக்கப்பட்ட    சொத்துவரியை ரத்து செய்யக்கோரி ரஜினிகாந்த் உயர்  நீதிமன்றத்தில் மனு செய்தார். பின்னர் அவர் வழக்கை வாபஸ் பெற்றார்.  நேற்று முன்தினம் ராகவேந்திரா  மண்டபத்துக்கான சொத்து வரி ரூ.6.50 லட்சத்தை ரஜினிகாந்த் செலுத்தினார். இந்நிலையில் நேற்று இரண்டாவது அரை ஆண்டுக்கான சொத்து வரியை சென்னை கோடம்பாக்கத்திலுள்ள மாநகராட்சி மண்டல அலுவலகத்தில் ரஜினி செலுத்தினார்.

Related Stories:

>