×

மாற்றுத்திறனாளிகள் சார்பில் நடிகை குஷ்பு மீது போலீசில் புகார்

உத்திரமேரூர்: உத்திரமேரூர் காவல் நிலையத்தில், நடிகை குஷ்பு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாற்றுத்திறனாளிகள் புகார் அளித்தனர். உத்திரமேரூர் காவல் நிலையத்தில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் நேற்று புகார் மனு அளிக்கப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது: காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் பாஜவில் இணைந்த சினிமா நடிகை குஷ்பு, சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மனவளர்ச்சி குன்றியோரை அவமானப்படுத்தும் வகையில், பொது இடத்தில் கருத்து தெரிவித்துள்ளார். எனவே, அவர் மீது ஊனமுற்றோர் உரிமைகள் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Tags : Khushbu , Actress Khushbu has lodged a complaint with the police on behalf of the disabled
× RELATED மதுராந்தகம் அருகே குஷ்பு சென்ற கார் கண்டெய்னர் லாரி மீது மோதி விபத்து