ஈக்காடு கிராமத்தில் உடற்பயிற்சி உபகரணங்கள் திருட்டு: நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் எம்எல்ஏ மனு

திருவள்ளூர்: திருவள்ளூர் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சிகளில் பூந்தமல்லி எம்எல்ஏ ஆ.கிருஷ்ணசாமி மேற்கொண்ட ஆய்வின் அடிப்படையில் பொதுமக்களின் கோரிக்கைகள் மற்றும் தேவைகள் குறித்த மனுவை கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமாரிடம் வழங்கினார். அப்போது ஈக்காடு கிராமத்தில் தாய் திட்டத்தின் மூலம் கட்டப்பட்ட உடற்பயிற்சி கூடம் அரசு பூங்கா இடத்திற்கு பதிலாக தனது இடத்தில் கட்டப்பட்டுள்ளதாக ஒருவர் வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் உடற்பயிற்சி கூடத்தை பொதுமக்கள் பயன்படுத்த முடியாததால் உடற்பயிற்சி உபகரணங்கள் அனைத்தும் திருடப்பட்டிருக்கிறது.  எனவே தாங்கள் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென எம்எல்ஏ கிருஷ்ணசாமி மனுவில் கூறியுள்ளார்.

Related Stories:

>