வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தில் அப்துல் கலாம் பிறந்தநாள் விழா

திருவள்ளூர்: முகப்பேர் வேலம்மாள் நெக்சஸ் குழுமம் டாக்டர் ஏபிஜே அப்துல்கலாமின் 89வது பிறந்த நாளை கொண்டாடியது. இதில் கல்வி குழும தாளாளர் எம்.வி.எம்.வேல்மோகன் தலைமை தாங்கினார். நகைச்சுவை நடிகர் பத்ம விவேக், புகழ்பெற்ற நடிகரும் மேடை கலைஞருமான சிவகுமார் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர். தொடர்ந்து, டாக்டர் அப்துல்கலாமின் வாழ்க்கை மற்றும் சாதனை குறித்த ஒரு மணி நேர லைவ் ஸ்ட்ரீமிங் ஆவணப்படம் காண்பிக்கப்பட்டது. பிறகு பல்வேறு உரைகள், நடனங்கள் மற்றும் பாடல்களுடன் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை தொடர்ந்து பசுமையான இந்தியா பற்றிய டாக்டர் கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் மாணவர்கள் மரக்கன்றுகளை நட்டனர்.

Related Stories:

>