×

கஞ்சா விற்ற 2 பேர் கைது

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த முனுசாமி நகரில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக கும்மிடிப்பூண்டி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் ராஜேந்திரன் தலைமையில் போலீசார் முனுசாமி நகர், சாமிரெட்டி கண்டிகை உள்ளிட்ட பகுதிகளில் நேற்று தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது, முனுசாமி நகர் பகுதியில் ரயில்வே தண்டவாளம் அருகே  கஞ்சா விற்ற 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், சாமிரெட்டி கண்டிகை பகுதியை சேர்ந்த மணிகண்டன்(23) மற்றும் தினேஷ்குமார்(25) என்பது தெரியவந்தது. தொடர்ந்து அவர்களிடமிருந்து ஒன்றரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து இருவரையும்  கைது செய்து சிறையில் அடைத்தனர்.       



Tags : 2 arrested for selling cannabis
× RELATED நியோமேக்ஸ் நிதி நிறுவன மோசடி வழக்கில் மேலும் 4 முக்கிய நிர்வாகிகள் கைது