×

புதிய தொழில் முனைவோர்கடன்பெற விண்ணப்பிக்கலாம்: கலெக்டர் அறிவிப்பு

திருவள்ளூர்: கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வௌியிட்ட அறிக்கை: புதிய தொழில் முனைவோர், தொழில் நிறுவனங்கள் மேம்பாட்டுத் திட்டம் ஆண், பெண் பட்டதாரிகள் மற்றும் பட்டயதாரிகளை, தொழில் முனைவோர்களாக்க, புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் கடன் பெற விரும்புவோர் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு, தொழில் நுட்பப்பயிற்சி (ஐடிஐ) இவைகளில் ஏதேனுமொன்றில் தேர்ச்சி பெற்றவராக இருத்தல் வேண்டும்.  விண்ணப்பிக்கும் நாளில் பழங்குடியினர் மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினர் 45 வயதுக்குட்பட்டவராக இருக்க வேண்டும். முதல் தலைமுறை தொழில் முனைவோராயிருப்பது அவசியம்.10 லட்சத்திற்கு குறையாமலும், ₹5 கோடிக்கு மிகாமலும் திட்ட மதிப்பீடு கொண்ட உற்பத்தி சேவை நிறுவனங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெறலாம்.

திட்ட மதிப்பீட்டில் அதிகபட்சமாக 30 லட்சத்தை உள்ளடக்கிய 25 சதவிகிதம் மானியமும், வங்கியினரிடமிருந்து பெற்ற கடனுக்கென செலுத்தப்படும் வட்டித்தொகையில் 3 சதவிகிதம் பின்முனை வட்டி மானியமும் இத்திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டு வருகிறது. கொரோனா வைரஸ் தொற்று காரணமாக நேர்காணல் மற்றும் பயிற்சியிலிருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. நடப்பு நிதியாண்டு 2020-21-ல் 48 நபர்களுக்கு 470 லட்சம் மானியம் வழங்க திருவள்ளுர் மாவட்டத்திற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மேலும், விவரங்களுக்கு www.msmeonline.tn.gov.in./needs என்ற இணையதளத்தை பார்க்கலாம். அல்லது பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், சிட்கோ தொழிற்பேட்டை, காக்களூர் தபால் நிலையம் அருகில், திருவள்ளுர் மாவட்டம் - 602003 என்ற முகவரியில் அல்லது 044-27666787, 27663796 என்ற எண்யை தொடர்புகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.   



Tags : entrepreneurs , New entrepreneurs can apply for a loan: Collector's Notice
× RELATED சுவிட்சர்லாந்தில் ‘தி ரைஸ் – எழுமின்’...