×

கொடநாடு கொலை வழக்கு: 4 பேருக்கு ஜாமீன்

ஊட்டி:  நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017ம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடந்த கொலை மற்றும் கொள்ளை வழக்கு தொடர்பாக கேரளாவை சேர்ந்த சயான், வாளையார் மனோஜ், உதயன், மனோஜ்சாமி, ஜித்தின் ஜாய், பிஜின் குட்டி, ஜம்சீர் அலி, தீபு, சதீசன் மற்றும் சந்தோஷ்சமி ஆகிய 10 பேர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கின் விசாரணை ஊட்டியில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது குற்றம் சாட்டப்பட்டுள்ள 10 பேரும் ஆஜராகினார்கள்.  

பிஜின்குட்டி, ஜித்தின் ஜாய், உதயன் மற்றும் மனோஜ்சாமி ஆகியோர் ஜாமீன் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த நீதிபதி வடமலை, 4 பேருக்கும் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். பின்னர் வழக்கை வரும் 28ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.Tags : Kodanadu ,persons , Kodanadu murder case: Bail for 4 persons
× RELATED இரட்டை கொலை வழக்கில் சாத்தான்குளம் போலீசாரின் ஜாமீன் மனுக்கள் தள்ளுபடி