×

கடந்த 30 ஆண்டுகளில் அடையாத உச்சபட்சமாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்து சாதனை: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை:   தமிழ்நாடு அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளின் காரணமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 30 ஆண்டுகளில் அடையாத உச்சபட்சமாக 4 லட்சத்து 12 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி மேற்கொள்ளப்பட்டது. இந்த வருடம் 2 லட்சத்து 11 ஆயிரத்து 300 ஏக்கரில் திருந்திய நெல்சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது மற்றும் முதன்முதலாக குறுவை பருவத்தில் நேரடி நெல் விதைப்பு முறை ஊக்குவிக்கப்பட்டு 32 ஆயிரத்து 367 ஏக்கரில் சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது. ஆயிரத்து 167 வருவாய் கிராமங்களுடன் கூடுதலாக 270 வருவாய் கிராமங்கள் பிரதம மந்திரியின் பயிர் காப்பீடு திட்டத்தில் அறிவிக்கை செய்யப்பட்டு இதுவரை ஒரு லட்சத்து 68 ஆயிரம் ஏக்கரில் பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது.

 தமிழ்நாட்டில் இதுவரை டெல்டா மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் 18 லட்சத்து 60 ஆயிரத்து 600 ஏக்கரில் நெல்சாகுபடி மேற்ெகாள்ளப்பட்டது. இதுநாள் வரை டெல்டா மாவட்டங்களில் சுமார் 3லட்சம்  ஏக்கர் பரப்பில் அறுவடை முடிக்கப்பட்டுள்ளது. இதனால் குறுவை சாகுபடி மூலம் டெல்டா மாவட்டங்களில் மட்டும் சுமார் 6 லட்சத்து 44 ஆயிரம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Tags : Kuru ,Government of Tamil Nadu , Record of cultivation of Kuru on 4 lakh 12 thousand acres, the highest in the last 30 years: Government of Tamil Nadu
× RELATED அரசியல் சட்டப்படி அனைத்துக்...