×

ஐபிஎல் டி20: மும்பை அணிக்கு 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது கொல்கத்தா அணி

அபுதாபி: இன்றைய ஐபிஎல் டி20 போட்டியில் மும்பை அணிக்கு கொல்கத்தா அணி 149 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. மும்பை அணிக்கு எதிராக டாஸ் வென்ற கொல்கத்தா அணி பேட்டிங் தேர்வு செய்தது. கொல்கத்தா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 148 ரன்கள் எடுத்தது. கொல்கத்தா அணி தரப்பில் கில் 21, திரிபாதி 7, ராணா 5 தினேஷ் கார்த்திக் 4, மோர்கன் 39, ரஸ்ஸில் 12, கும்மின்ஸ் 53 ரன்கள் எடுத்தனர். மும்பை அணி தரப்பில் போல்ட் 1, கோல்டர் நைல் 1, பும்ரா 1, சாஹர் 2 விக்கெட் வீழ்த்தினர். இதனை தொடர்ந்து 149 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு மும்பை அணி களமிறங்க உள்ளது. இதுவரை மும்பை அணி விளையாடிய 7 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன் உள்ளது. கொல்கத்தா அணி இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 4 போட்டிகளில் வெற்றி பெற்று 8 புள்ளிகளுடன் உள்ளது.

Tags : IPL T20 ,Kolkata ,Mumbai , Kolkata, Mumbai, IPL
× RELATED கொல்கத்தாவுடன் இன்று மோதல்: நெருக்கடியில் ஆர்சிபி