×

கொரோனாவின் தாய் வீடான சீனாவின் பொருளாதார வளர்ச்சியை கண்டு வல்லுநர்கள் வியப்பு

பெய்ஜிங் : 2020 ம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சி கொண்ட மிகச் சில நாடுகளில் சீனாவும் ஒன்றாக இருக்கும் என சர்வதேச நிதியத்தின், நிதி விவகாரங்க ளுக்கான துறை இயக்குனர் விட்டொர் காஸ்பர் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வுகாண் நகரில் தோன்றிய கொரோனா தொற்று, சில வாரங்களில்  பலவற்றில் பரவியது. அதைத் தொடர்ந்து போடப்பட்ட ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அமெரிக்க உள்ளிட்ட நாடுகளின் பொருளாதாரம் சரிய தொடங்கியது. தெற்காசியாவில் உள்ள இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மிகவும் கவலைக்குரியதாக இருப்பதாக ஐஎம்எப் தெரிவித்துள்ளது. நடப்பு ஆண்டில் இந்தியாவின் ஜிடிபி அடிப்படையிலான தனிநபர் சராசரி வருமானம் வங்கதேசத்தை விட குறைவாக இருக்கும் என்று ஐ.எம்.எப். அடிக்கும் எச்சரிக்கை மணியாகும்.

ஆனால் சீனாவை பொறுத்தவரை செப்டம்பர் மாதத்தில் ஏற்றுமதி 9.9%மும் இறக்குமதி 13.2%மும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, 3.5 ட்ரில்லியன் டாலரில் வர்த்தகம் நடந்துள்ளதாகவும் இது ஆகஸ்ட் மாதத்தைவிட 7% அதிகம் என்றும் புள்ளி விவரங்கள் கூறுகின்றன. கொரோனாவுக்கு முன்பாக வர்த்தக போரை நேரடியாக தொடுத்த அமெரிக்காவின் வரி விதிப்பு மிரட்டல்களைத் தாண்டி இந்த சாதனையை சீனா எட்டியுள்ளது பொருளாதார வல்லுநர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. சீனா ஜூலை மாதத்திற்கு பிறகு பொருளாதாரத்தில் வழக்கமான வேகத்தில் செல்ல தொடங்கி உள்ளது. இந்த ஆண்டு சீனா 1.9 சதவீதம் வளர்ச்சியடையும் என சர்வதேச நிதியம் கணித்திருக்கிறது. 

Tags : Experts ,China ,growth ,Corona ,
× RELATED தென் சீன கடல் பகுதியில் நான்கு...