×

நெல் கொள்முதல் நிலையங்களில் ஆய்வு செய்ய நீதிபதிகள் அறிவுரை

சென்னை: அனைத்து நெல் கொள்முதல் நிலையங்களிலும் லஞ்ச ஒழிப்பு துறை திடீர் ஆய்வு செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.  தமிழகத்தில் போதிய நெல் கொள்முதல் நிலையங்களை திறக்கக் கோரிய மனு விசரணையின் போது அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்பாக விரிவான அறிக்கை தாக்கல் செய்ய தயார் என்று அரசு வழக்கறிஞர் தெரிவித்தார். அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்குமாறு நீதிபதிகளிடம் அரசு தலைமை வழக்கறிஞர் கோரிக்கை விடுத்துள்ளார். மயிலாடுதுறை நெல் கொள்முதல் நிலையத்தில் லஞ்ச ஒழிப்பு துறை ஆய்வு செய்து ரூ.90,000 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தகவலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், கொள்முதல் நிலையங்களில் திடீர் ஆய்வு நடத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசு தரப்பில் அறிக்கை தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் வழங்கி விசாரணையை அக்டோபர் 28க்கு உயர்நீதிமன்றம் ஒத்திவைத்தது.

Tags : Judges ,paddy procurement centers , Paddy Procurement, Inspection, Judges Advice
× RELATED உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாஜி...