×

ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன்: முத்தையா முரளிதரன் விளக்கம்

கொழும்பு: ஒருபோதும் நான் அப்பாவி மக்களின் படுகொலைகளை ஆதரிக்கவும் இல்லை, ஆதரிக்கவும் மாட்டேன் என்று முத்தையா முரளிதரன் விளக்கம் அளித்துள்ளார். 800 திரைப்பட விவகாரம் குறித்து முத்தையா முரளிதரன் விளக்கமளித்துள்ளார். சிங்களர்களாக இருந்தாலும் ஈழத்தமிழர்களாக இருந்தாலும் அனைவரையும் ஒன்றாகவே பார்க்கிறேன். நான் என் மலையக மக்களுக்கு செய்த உதவிகளைவிட ஈழ மக்களுக்கு செய்த உதவிகளே அதிகம் என்று முரளிதரன் தெரிவித்துள்ளார். தமிழர்களை கொன்று குவித்த நாள் தான் என் வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என திரித்து எழுதுகிறார்கள். எனது பள்ளி காலம் முதலே தமிழ் வழியில் படித்து வளர்ந்தவன் என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். போர் சூழ்நிலையிலேயே தான் பள்ளிக் காலத்தை கடந்ததாக முத்தையா மூலரிதரன் விளக்கமளித்துள்ளார். பள்ளியில் ஒன்றாக விளையாடிய மாணவன் மறுநாள் உயிருடன் இருக்க மாட்டான். வெளியே சென்ற உறவினர்கள் வீடு திரும்பினால் தான் நிஜம். இலங்கையில் போர் முடிவுற்றது சராசரி மனிதனாக பாதுகாப்பை உணர செய்கிறது. 2 பக்கமும் உயிரிழப்புகள் இல்லாமல் இருந்ததை கொண்டே எனது வாழ்க்கையில் மகிழ்ச்சியான நாள் என்று கூறினேன். எனக்கு தமிழ் தெரியாது என்பது மற்றுமொரு தவறான செய்தி. நான் கிரிக்கெட் அணியில் எப்படி இடம்பெற்று சாதித்தேன் என்பதை பற்றிய படம் தான் 800 என்று முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.

Tags : Muthiah Muralitharan, Description
× RELATED அமெரிக்காவில் சரக்கு கப்பல் மோதி...