×

வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மன்.. கட்டபொம்மனைப் போன்றே நெஞ்சுரம் கொள்வோம்! : முதல்வர், மு.க.ஸ்டாலின் புகழாரம்!!

சென்னை : முதல்வர் பழனிசாமி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுதினத்தையொட்டி அவரது பெருமைகளை பகிர்ந்து கொண்டுள்ளார் . பாஞ்சாலங்குறிச்சி, கயத்தாறு என்ற பெயரை கேட்டவுடன் நினைவுக்கு வரும் பெயர் வீரபாண்டியன் கட்டபொம்மன். 1760ம் ஆண்டு சனவரி 3ம் நாள் பிறந்த வீரபாண்டிய கட்டபொம்மன். தனது 30வது வயதில் பாளையக்காரராகப் பொறுப்பேற்றார். ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி விதித்த வரியை கட்ட மறுத்ததால் ஏற்பட்ட மோதலில் இறுதியாக 1799ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி வீரபாண்டிய கட்டபொம்மன் கயத்தாறில் தூக்கிலிடப்பட்டு வீரமரணம் அடைந்தது நினைவுகூறத்தக்கது.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமி தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆங்கிலேயரின் அடக்கு முறையை எதிர்த்து “என் நாட்டில் விளையும் பொருட்களுக்கு வரி செலுத்த முடியாது”என்ற நிலைப்பாட்டில் உறுதியாய், தூக்கு மேடை ஏறியபோதும் தூக்கு கயிற்றை முத்தமிட்டு,வீரத்திற்கு இலக்கணமாய் விளங்கும் வீரபாண்டிய கட்டபொம்மனை அவர்தம் நினைவு நாளில் வணங்கி நினைவு கூர்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

இதே போல் திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், வீரம்விளைந்த நெல்லைச் சீமையில் பிறந்து நாட்டிற்காக உடல், பொருள், உயிர் ஈந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவுநாள் இன்று!அடக்குமுறைக்கு அஞ்சாத வீரம், ஆதிக்கத்துக்கு அடிபணியாத தீரம், கொள்கைக்காக தியாகம் ஆகியன அவர்தம் வாழ்க்கைப் பாடங்கள்!

கட்டபொம்மனைப் போன்றே நெஞ்சுரம் கொள்வோம்!, எனத் தெரிவித்துள்ளார்.

Tags : Veerapandiya Kattabomman ,MK Stalin ,Chief Minister , Chief, MK Stalin, praise
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...