×

நீட்தேர்வு முடிவுக்கு பயந்து மாணவன் தற்கொலை : போலீசுக்கு தெரியாமல் சடலம் எரிப்பு

நாமகிரிப்பேட்டை, :நாமக்கல் மாவட்டம், நாமகிரிப்பேட்டை அருகேயுள்ள சம்பாபாலிபுதூர் கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன். பழங்குடி இனத்தை சேர்ந்த இவரது 2வது மகன் கதிர்வேல், பிளஸ்2 பொதுத்தேர்வில் 362 மதிப்பெண் பெற்றிருந்தார். மருத்துவம் படிக்க விரும்பிய கதிர்வேலை, பழனியப்பன் தனது குடும்ப சூழலையும் பொருட்படுத்தாமல், கேரளாவுக்கு அனுப்பி, அங்குள்ள நீட் பயிற்சி மையத்தில் படிக்க வைத்தார்.
கொரோனா ஊரடங்கு காரணமாக, கடந்த 6 மாதத்திற்கு முன்பே கேரளாவில் இருந்து நாமகிரிப்பேட்டை வந்த கதிர்வேல், கடந்த செப்டம்பர் 13ம் தேதி, நாமக்கல்லில் நீட்தேர்வு எழுதினார். நீட்தேர்வில் தோல்வியடைந்து விடுவோமோ? என்ற அச்சத்தில், 12ம் தேதி மாலை வீட்டில் உள்ள மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கதிர்வேலின் உடலை போலீசுக்கு தெரிவிக்காமல் தகனம் செய்துவிட்டனர். இது குறித்து,  நாரைக்கிணறு கிராம நிர்வாக அலுவலர் (பொ) பிருந்தா, ஆயில்பட்டி காவல் நிலையத்தில் புகார் செய்தார். அதன் அடிப்படையில், கதிர்வேலின் பெற்றோர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று நீட்தேர்வு முடிவுகள் வெளிவரும் நிலையில், மருத்துவம் படிக்க ஆசைப்பட்ட மாணவன், தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம், நாமகிரிப்பேட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 

Tags : Student ,suicide , Extension, student, suicide, corpse, cremation
× RELATED சாலையோரம் சுற்றித் திரியும் மனநலம்...