×

கொரோனாவால் உயிரிழந்த வெற்றிவேல் உடல் தகனம் : டிடிவி.தினகரன் அஞ்சலி

சென்னை, :கொரோனா தொற்றால் உயிரிழந்த அமமுக பொருளாளர் வெற்றிவேல் உடல் ஓட்டேரியில் இன்று தகனம் செய்யப்பட்டது. அமமுக பொருளாளர் வெற்றிவேல் கொரோனா தொற்று காரணமாக கடந்த சில தினங்களுக்கு முன்பு போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து உடல்நிலை மோசமடைந்தது. இதையடுத்து, அவருக்கு செயற்கை சுவாசக்கருவி பொருத்தப்பட்டு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்தநிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, சுகாதாரத்துறை அதிகாரிகளின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி அவரது உடல் கீழ்பாக்கத்தில் உள்ள வீட்டிற்கு கொண்டுசெல்லப்பட்டது. பின் அங்கிருந்து மாநகராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் அவரது உடல் ஓட்டேரியில் உள்ள மின்மயானத்தில் இன்று காலை தகனம் செய்யப்பட்டது.

இதேபோல், இன்று காலை அமமுக தலைமை அலுவலகத்தில் அமைக்கப்பட்டிருந்த வெற்றிவேல் உருவப்படத்திற்கு பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மற்றும் கட்சி மூத்த நிர்வாகிகள் மலரஞ்சலி செலுத்தினர்.

Tags : Vetrivel ,Corona: Tribute to DTV.Dhinakaran , Land fraud, CBI, investigation, actor Suri, petition...
× RELATED கடவுள் முருகனின் துணை கொண்டு...