×

நடிகர் விஜய்சேதுபதி நடிக்கும் 800 திரைப்பட விவகாரம்: தமிழர் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சி இடம்பெறாது.: தயாரிப்பு நிறுவனம் விளக்கம்

சென்னை: இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் வழக்கை வரலாறு திரைப்படத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்க “இயக்குனர் இமயம்” எனப் புகழப்படும் பாரதிராஜா எதிர்ப்பு தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைத்தவர் என்பதால் 800 என்ற தலைப்பில் உருவாகிவரும் இந்த படத்தில் முத்தையா முரளிதரன் கதாப்பாத்திரத்தில் நடிகர் விஜய்சேதுபதி நடிக்கிறார்.

இதற்க்கு இலங்கை தமிழர்களும், திராவிட கழக தலைவர் கி.வீரமணி, இயக்குனர்கள் சேரன், சீனுராமசாமி உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் இயக்குனர் பாரதிராஜா விடுத்துள்ள அறிக்கையில்  , ஈழத்தமிழர்கள் செத்துவிழ்ந்த போது சிங்கள இனவாதத்தை முழுக்க முழுக்க ஆதரித்த முத்தையா முரளிதரன் வேடத்தில் நடிக்க ஏன் நீங்கள் மறுக்கவில்லை என்று உலக தமிழர்கள் கேள்வி எழுப்புவதாக அவர் கூறியுள்ளார்.

முன்னதாக கவிஞர் தாமரை வெளியிட்ட அறிக்கையில் சிறந்த நடிப்பு கலைஞரான நடிகர் விஜய்சேதுபதியின் முகம் வேறு ஒருவருக்கானது என்றும், மாவீரர் பிரபாகரன் வழக்கை வரலாறு படத்தில் நடிக்க ஆயத்தம் ஆகுமாரும் கூறியிருந்தார். இதனிடையே இளைய தலைமுறை தங்கள் கனவுகளை அடைய இந்த படம் உத்வேகமளிக்கும் என்று கூறியுள்ள பட தயாரிப்பு நிறுவனம், 800 திரைப்படத்தில் ஈழத்தமிழர்கள் போராட்டத்தை சிறுமைப்படுத்தும் காட்சி இடம்பெறாது என்று உறுதியளிப்பதாக தெரிவித்துள்ளது.


Tags : Vijay Sethupathi ,film affair ,Tamil , Actor Vijay Sethupathi to star in 800 film affair: No scene to minimize Tamil struggle: Production Company Description
× RELATED திருட்டு பாடம் விஜய் சேதுபதி வௌியிட்ட டீசர்