கோஹ்லி, மோரிஸ் அதிரடி வீண்: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அபார வெற்றி

ஷார்ஜா: கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ஐபிஎல் டி20 லீக் ஆட்டத்தில் 177 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை தோற்கடித்தது. கடைசி பந்தில் 6 ரன் எடுத்து திரில் வெற்றி பெற்றது. ஷார்ஜா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த ஐபிஎல் போட்டியில், டாஸ் வென்ற ஆர்சிபி கேப்டன் கோஹ்லி பேட்டிங்கை தேர்வு செய்தார். அந்த அணி மாற்றம் ஏதுமின்றி களமிறங்கியது.  பஞ்சாப் அணியில் மன்தீப், பிரப்சிம்ரன், முஜீப் ஆகியோருக்கு பதிலாக கிறிஸ் கேல், முருகன் அஷ்வின், தீபக் ஹூடா இடம் பெற்றனர். மேலும் அதிரடி வீரர் கேல், நடப்பு தொடரில் முதல் முறையாக விளையாடுகிறார்.

பெங்களூர் தொடக்க வீரர்களாக ஆரோன் பிஞ்ச், படிக்கல் களமிறங்கினர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 38 ரன் சேர்த்தனர். இவர்கள் ஆட்டம் இழந்ததால் ஆர்சிபி ஸ்கோர் வேகம் எடுக்க முடியாமல் திணறியது. இதன் பின்னர் கேப்டன் கோஹ்லி ஒரு முனையில் கோஹ்லி உறுதியுடன் பேட் செய்ய, மற்ற வீர்கள் வந்தவுடன் பவுலியன் திரும்பினர். அவலுடன் எதிர்பார்க்கப்பட்ட டி வில்லியர்சை 6வது வீரராகக் களமிறக்கிய வியூகம் சுத்தமாக எடுபடவில்லை. ஷமி வீசிய 18வது ஓவரில் டி வில்லியர்ஸ் 2 ரன், கோஹ்லி 48 ரன்னில் (39 பந்து, 3 பவுண்டரி) அடுத்தடுத்து ஆட்டமிழந்தது பெங்களூர் அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

ஜார்டன் வீசிய 19வது ஓவரில் 10 ரன் கிடைக்க, ஷமி கடைசி ஓவரை வீசினார். ஆர்சிபி 160 ரன் எடுப்பதே சந்தேகம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஷமியின் பந்துவீச்சை மோரிஸ்  உடனா ஜோடி பிரித்து மேய்ந்தது. அந்த ஓவரில் மட்டும் ஒரு பவுண்டரி, 3 சிக்சர் உட்பட 24 ரன்கள் கிடைக்க, ஆர்சிபி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 171 ரன் குவித்தது. பஞ்சாப் பந்துவீச்சில் ஷமி, எம்.அஷ்வின் தலா 2, அர்ஷ்தீப், ஜார்டன் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 172 ரன் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் கிங்ஸ் லெவன் களமிறங்கியது. கேப்டன் கே.எல்.ராகுல், மயாங்க் அகர்வால் இருவரும் அதிரடியாக விளையாட ெதாடங்கினர்.

இதில் அகர்வால் 45 ரன் எடுத்தார். அதன் பிறகு வந்த கிறிஸ்கெய்ல் அதிரடியாக விளையாடி 53(45) எடுத்து 19 ஓவரின் 5 பந்தில் ரன் அவுட் ஆனால். இதனால் ரன்ரேட் ஜெட் வேகத்தில் உயர்ந்தது. இதில் இறுதி வரை ஆட்டமிழக்காமல் ராகுல் 61 எடுத்தார். இறுதியில் பஞ்சாப் அணி 177 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் தொடர் தோல்விக்கு பிறகு வெற்றியை சுவைத்தது. வெற்றிக்கு ஒரு ரன் தேவைப்பட்ட நிலையில் பூரன் கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து திரில் வெற்றியை பஞ்சாப் அணிக்கு பெற்று தந்தார்.

Related Stories:

>