×

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மவுன ஊர்வலம்

காஞ்சிபுரம்: உத்தரபிரதேச மாநிலத்தில் இளம்பெண் பாலியல் பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்டதை கண்டித்து, காஞ்சிபுரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தேரடியில் தொடங்கி பெரியார் நினைவுத்தூண் வரை மவுன ஊர்வலமும், பின்னர் கண்டன ஆர்ப்பாட்டமும் நடந்தது.
மாவட்டக்குழு உறுப்பினர் சவுந்தரி தலைமை தாங்கினார். நிர்வாகிகள் கன்னிகா, சுமதி, புவனேஸ்வரி, ஜெயந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் இ.சங்கர் கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தார்.உத்தரபிரதேசத்தில் இளம்பெண் படுகொலை விவகாரத்தில், சுயேச்சையாக நீதித்துறை விசாரணைக்கு உத்தரவிடவேண்டும்.

இதில் ஈடுபட்டவர்ளுக்கு குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தண்டனை வழங்க வேண்டும். உத்தரபிரதேச மாநிலம் தலித் மற்றும் பழங்குடியின பெண்கள் மீது பாலியல் வன்முறை செய்வதில் முதன்மையான மாநிலமாக உள்ளது. எனவே, முதல்வர் யோகி ஆதித்யநாத் பதவிவிலக வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நகர செயலாளர் சி.சங்கர், மாவட்டக்குழு உறுப்பினர்கள் வாசுதேவன், மதுசூதனன், நேரு உள்பட பலர் கலந்து கொண்டனர்.Tags : Marxist Communist Silent Procession , Marxist Communist Silent Procession
× RELATED ஆளுங்கட்சியினர் அடிக்கும் கொள்ளைக்கு...