×

புதுப்பட்டினம் திமுக சார்பில் உறுப்பினர் சேர்க்கை முகாம்

திருக்கழுக்குன்றம்: கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் ஊராட்சி திமுக சார்பில், கட்சி கொடியேற்று விழா, புதிய உறுப்பினர் சேர்க்கை மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் முகாம் நடந்தது. புதுப்பட்டினம் ஊராட்சி முன்னாள் தலைவர் பக்கீர் முகமது தலைமை தாங்கினார். புதுப்பட்டினம் ஊராட்சி செயலாளர் தாஜுதீன் முன்னிலை வகித்தார்.  புதுப்பட்டினம் ஊராட்சிக்கு உட்பட்ட இந்திரா குடியிருப்பு, ஆர்எம்ஐ நகர், ஹாஜியார் நகர் ஆகிய பகுதிகளில் திமுக கொடியேற்றப்பட்டது. பின்னர், புதிய உறுப்பினர் சேர்க்கை முகாம் மற்றும்  உறுப்பினர்களுக்கு அட்டைகள் வழங்கப்பட்டன. இதில், திமுக நிர்வாகிகள் மனோகரன், பிரகாஷ், மன்சூர் ராஜா, முத்துகுமார், முகமது ஜலால், நரேந்திரன், முருகேசன், கதிர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Camp ,DMK ,Puthuppattinam , Membership Camp on behalf of DMK, Puthuppattinam
× RELATED சிவகிரியில் திமுக உறுப்பினர் சேர்க்கை