×

சேலம் சிலுவம்பாளையத்தில் காரிய நிகழ்ச்சி முதல்வரின் தாயார் அஸ்தி காவிரி ஆற்றில் கரைப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் காலமான முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் அஸ்தி காவிரியில் நேற்று கரைக்கப்பட்டது. தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் தாயார் தவுசாயம்மாள் (93) கடந்த 12ம் தேதி காலமானார். சேலம் மாவட்டம் இடைப்பாடி அருகே சிலுவம்பாளையம் வீட்டில் வைக்கப்பட்டிருந்த அவரது உடலுக்கு அமைச்சர்கள் உள்பட ஆயிரக்கணக்கானோர் அஞ்சலி செலுத்தினர். பின்னர் சிலுவம்பாளைத்தில் உள்ள மயானத்தில் உடல் தகனம் செய்யப்பட்டது. நேற்று தவுசாயம்மாளின் 3ம் நாள் காரியம் அவரது வீட்டில் நடந்தது.

மயானத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி, குடும்பத்தினருடன் ஊர்வலமாக சென்றார். உடன் அமைச்சர்கள் செங்கோட்டையன், உதயகுமார், டாக்டர் விஜயபாஸ்கர், உடுமலை ராதாகிருஷ்ணன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், கடம்பூர் ராஜு, வேலுமணி, தங்கமணி, டெல்லி சிறப்பு பிரதிநிதி தளவாய்சுந்தரம், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்எல்ஏக்கள்,  நிர்வாகிகள், தொண்டர்கள் சென்றனர். அங்கு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது. பின்னர் தவுசாயம்மாளின் அஸ்தி கலசத்தில் எடுத்து செல்லப்பட்டு, அங்குள்ள காவிரி ஆற்றில் கரைக்கப்பட்டது.

Tags : Chief Minister ,ashti ,river ,Cauvery ,Ministers , Chief Minister's mother's ashes dissolve in Cauvery river: Ministers participate
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...