×

பூந்தமல்லி அருகே குடிசை வீடு எரிந்து சேதம்

பூந்தமல்லி: சென்னை மதுரவாயலை அடுத்த ஆலப்பாக்கம், கங்கையம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன் (50) பெயிண்டர் வேலை செய்து வருகிறார். இவர், அப்பகுதியில் குடும்பத்துடன் குடிசை வீட்டில் வசித்து வந்தார். நேற்று காலை வழக்கம் போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்நிலையில், அவரது வீட்டில் இருந்து திடீரென புகை வந்தது சிறிது நேரத்தில் வீடு தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு மதுரவாயல் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை போராடி அணைத்தனர். இந்த தீ விபத்தில் வீட்டில் இருந்த மின்விசிறி, கட்டில், டீவி, பீரோ  உள்ளிட்ட அனைத்துப் பொருட்களும் தீயில் எரிந்து நாசமானது. சம்பவ இடத்திற்கு வந்த மதுரவாயல் போலீசார் தீ விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டதில் மின்கசிவு காரணமாக குடிசையில் தீப்பற்றி எரிந்து வீடு முழுதும் எரிந்தது தெரியவந்தது.   


Tags : Cottage house ,fire ,Poonamallee , Cottage house damaged near Poonamallee
× RELATED பூந்தமல்லி அருகே சென்னை - பெங்களூரு...