×

மருத்துவப் படிப்புகளில் நடப்பாண்டில் ஓபிசி இடஒதுக்கீட்டை வழங்க மறுப்பதா? தலைவர்கள் கண்டனம்

சென்னை: மருத்துவக் கல்வி அகில இந்திய தொகுப்புக்கு நடப்பாண்டிலேயே இடஒதுக்கீடு வழங்க மறுக்கும் மத்திய அரசுக்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ராமதாஸ் (பாமக நிறுவனர்): மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு நடப்பாண்டில் இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த நிலைப்பாடும், இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவையாகும். உயர்நீதிமன்ற உத்தரவை செயல்படுத்த முன்வராத மத்திய அரசு, இட ஒதுக்கீடு குறித்து பல வழக்குகள் நிலுவையில் இருப்பதால் நடப்பாண்டில் அகில இந்திய தொகுப்பில் இடஒதுக்கீடு வழங்க முடியாது என்று கூறியுள்ளது. இது பெரும் துரோகம் ஆகும்.

பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளுக்கும் தமிழ்நாட்டில் அகில இந்திய தொகுப்பு இடஒதுக்கீட்டை செயல்படுத்துவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனவே, மருத்துவக் கல்விக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில், தமிழ்நாட்டில் மட்டும், நடப்பாண்டிலேயே பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டை செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும். வைகோ ( மதிமுக பொதுச்செயலாளர்): மருத்துவ படிப்பில் இதர பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 27 %மற்றும் தமிழகத்தில் பின்பற்றப்படும் 50 %இட ஒதுக்கீடு 2020-21 நடப்புக் கல்வி ஆண்டில் வழங்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அகில இந்தியத் தொகுப்புக்கு மாநில அரசுகளால் வழங்கப்படும் மருத்துவக் கல்வி இடங்களில், ஓபிசி மாணவர்களுக்கு சட்ட ரீதியாகக் கிடைக்க வேண்டிய இடஒதுக்கீடு மறுக்கப்படுவது அநீதியாகும்.


Tags : Leaders , Refuse to grant OBC reservation in practice in medical courses? Leaders condemned
× RELATED ஈரானின் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்க...