×

தற்சார்பு இந்தியா என்பதை மேம்படுத்த எண்ணெய் நிறுவனங்களுக்கு வலைதளம்: இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் லிமிடெட் அறிவிப்பு

சென்னை: தற்சார்பு இந்தியா என்பதை மேம்படுத்த உறுதுணை புரியும் நம்பகத்தன்மை மிக்க வலைதளம் ஒன்று எண்ணெய் நிறுவனங்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது என்று, ஐஓசிதலைமை பொதுமேலாளர் ஜான் பிரசாத் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: தற்சார்பு இந்தியா என்னும் ஆத்ம நிர்பர் பாரதத்தைப் படைக்க வேண்டும் என்கிற பிரதமரின் தொலை நோக்கு சிந்தனையின் உந்துதலால் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை அமைச்சகத்தின் செயலரின் தலைமையில் ஒரு சிறப்பு பணிக்குழு அமைக்கப்பட்டது. இந்தக்குழுவில் இந்தியன் ஆயில் இஐஎல், ஓஎன்ஜிசி, கெய்ல், பிபிசிஎல், எச்பிசிஎல்  போன்ற பல்வேறு பொதுத்துறை எண்ணெய் வாயு நிறுவனங்களின் சேர்மன்களும் தனியார் சுத்திகரிப்பு அமைப்புகளின் தலைவர்களும் அங்கம் வகிக்கின்றனர். இந்த சிறப்பு பணிக் குழுவின் வழிகாட்டுதலில் எஞ்சீனியர்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனம் இந்த வலைதளம் உருவாக்கத்தின் கருத்துருவாக்கம் முதல் நிறுவுதல் வரையான பணிகளை முன்னெடுத்துச் செல்லும்.

Tags : Oil Companies ,Announcement ,India ,Indian Oil Corporation Limited , Website for Oil Companies to Improve Independent India: Indian Oil Corporation Limited Announcement
× RELATED வாணியம்பாடி அருகே 2 ஆண்டுகளாக...