×

மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர்

சென்னை: மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பல்வேறு கட்சியினர் திமுகவில் இணைந்தனர். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் நேற்று அண்ணா அறிவாலயத்தில், தூத்துக்குடி தெற்கு மாவட்டம், அதிமுகவை சேர்ந்த  உடன்குடி ஒன்றிய எம்.ஜி.ஆர். இளைஞர் அணிச் செயலாளரும்-உடன்குடி ஒன்றிய பஞ்சாயத்து கூட்டமைப்புச் செயலாளருமான-செட்டியாபத்து ஊராட்சி மன்றத் தலைவருமான கே.பாலமுருகன்  திமுகவில் இணைந்தார். அப்போது தூத்துக்குடி தெற்கு மாவட்டப் பொறுப்பாளர் அனிதா ராதாகிருஷ்ணன், எம்.எல்.ஏ., மாவட்ட மாணவர் அணி துணை அமைப்பாளர் வழக்கறிஞர் சிவசுப்பிரமணியன் ஆகியோர் உடனிருந்தனர்.

இதே போல தருமபுரி மாவட்டம், லோக் ஜன் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் டாக்டர் மதிவாணன் திமுகவில் இணைந்தார். அப்போது தர்மபுரி மாவட்டச் செயலாளர் தடங்கம் சுப்பிரமணி, எம்.எல்.ஏ., உடனிருந்தார். மேலும் ஈரோடு தெற்கு-வடக்கு மாவட்டத்தைச் சேர்ந்த இந்திய மக்கள் முன்னேற்றக் கட்சியின் நிறுவனத் தலைவர் பி.பொன்னுதுரை திமுகவில் இணைந்ததோடு, ஈரோடு மண்டலத்தில் உள்ள ஒரு லட்சம் உறுப்பினர்களைக் கொண்ட தனது கட்சியையும் திமுகவில் இணைத்துக் கொண்டார். அப்போது திமுக துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், எம்.பி., ஈரோடு தெற்கு மாவட்டச் செயலாளர் சு.முத்துசாமி, ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளர் என்.நல்லசிவம், ஆகியோர் உடனிருந்தனர்.

* ஜப்பான் துணை தூதர் சந்திப்பு
திமுக தலைவரும்-சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலினை நேற்று சென்னை ஆழ்வார்ப்பேட்டையில் உள்ள அவரது இல்லத்தில்-தமிழகத்தில் செயல்படும் ஜப்பான் நாட்டு துணைத் தூதரகத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுக் கொண்ட துணை தூதர் மசாயுகி டாகா, மரியாதை நிமித்தமாகச் சந்தித்துப் பேசினார்.

Tags : parties ,MK Stalin ,DMK , In the presence of MK Stalin, various parties joined the DMK
× RELATED முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரி...