×

ஜெயலலிதா வாழ்க்கையை சினிமாவாக தயாரிக்க தடை கோரி ஜெ.தீபா மேல்முறையீடு: ஐகோர்ட்டில் நவம்பர் 10ம் தேதி இறுதி விசாரணை

சென்னை: முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவில், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தமிழில் இயக்குனர் ஏ.எல்.விஜய், விஷ்ணுவர்தன் இந்தூரி, இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இணையதளத் தொடராக தயாரித்து வருகிறார். இதற்கு ஜெயலலிதாவின் சட்டப்பூர்வ வாரிசான என்னிடம் அனுமதி எதுவும் பெறவில்லை என கூறி திரைப்படங்களுக்கு தடைகோரிய மனு தள்ளுபடியானது.  

இதனை எதிர்த்து ஜெ.தீபா ஐகோர்ட்டில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுப்பையா, சி. சரவணன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பில் ஆஜரான வக்கீல், தலைவி திரைப்படத்தில் மனுதாரரின் தந்தையை தவறாக சித்தரித்து காட்சிகள் இடம் பெற்றுள்ளது. எனவே அந்த திரைப்படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றார்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கின் இறுதி விசாரணை  வரும் நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில் நடத்தப்படும் என்று உத்தரவிட்டனர்.

Tags : J Deepa ,hearing ,Jayalalithaa ,I-Court , J Deepa appeals for ban on making Jayalalithaa's life a movie: Final hearing in I-Court on November 10
× RELATED மதவாதம், வெறுப்பு அரசியல் தோல்வி...